Lyrics of Iru Logam Potrum Irai Thootharam
இருலோகம் போற்றும் இறைதூதராம்
இசுலாத்தை தந்த நபிநாதராம்இருலோகம் போற்றும் இறைதூதராம்
இசுலாத்தை தந்த நபிநாதராம்
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர்
எங்கள் நபிநாதர், நபிநாதர்
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
~~ uploaded by Aslam2306 -Tenkasi ~~
கோடி கோடி இன்பம்
எங்கள் கோமான் நபி சென்ற வழியில்
பாடி பாடி மகிழ்வோம்
எங்கள் பயஹம்பர் பகர்ந்த பொன் மொழியில்
இன்னும் சொல்லவா அவர் பெருமை....
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்
~~ uploaded by Aslam2306 -Tenkasi ~~
ஆதி இறை தந்த வடிவம்
அன்னை ஆமினார் ஈன்றேடுத்த செல்வம்
நீதி நிலை நாட்டி என்றும்
நம்மை நெறியோடு வாழவைத்த நெஞ்சம்
இன்னும் சொல்லவா அவர் மகிமை...
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்
~~ uploaded by Aslam2306 -Tenkasi ~~
வானமும் வையமும் போற்றும்
நல்ல வழிகாட்டும் உயர் மார்க்கம் தந்தார்
தீன் மழை பெய்திட எங்கும்
நபி திருவேத மறை அளித்துச்சென்றார்
இன்னும் சொல்லவா அவர் புகழை...
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர்
எங்கள் நபிநாதர்..நபிநாதர்
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
அண்ணல் மஹமூதர்.. அண்ணல் மஹமூதர்....
அண்ணல் மஹமூதர்....
Comments
Post a Comment